×

திருட வந்த இடத்தில் ஞானோதயம் ஓ... ராணுவ வீரர் வீடா? என்னை மன்னித்துவிடுங்கள் : சுவரில் எழுதிவைத்துவிட்டு சென்ற ‘நியாய’ திருடன்

திருவனந்தபுரம்: கொச்சி  அருகே திருவாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில் 5  கடைகளில் திருடர்கள் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர். இதுகுறித்து  அறிந்த கொச்சி போலீசார் நேற்று காலை சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை  நடத்தினர். கடையை ஒட்டி முன்னாள் ராணுவ வீரர் ஐசக் மாணி வீடு உள்ளது.  இந்த வீட்டிலும் முன்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததை போலீசார் கவனித்தனர். பக்கத்து வீடுகளில் விசாரித்தபோது அவர் வெளிநாடு சென்றிருப்பது தெரியவந்தது. அங்கும் கொள்ளை நடந்திருக்கலாம் என்று கருதிய போலீசார் கதவை திறந்து பார்த்தனர்.

அப்போது வீட்டின் உட்பகுதியில்  சுவரில், மலையாளத்தில் சில வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அதில், ‘இது ஒரு  ராணுவ வீரரின் வீடு என்பது  தெரியாமல் உள்ளே நுழைந்துவிட்டேன். கடைசி  ேநரத்தில் தான் ராணுவீரர் வீடு என்று தெரியவந்தது. ராணுவ வீரர் தொப்பியை  வைத்துதான் அதை கண்டு பிடித்தேன். தெரியாமல் பூட்டை உடைத்து உள்ளே  புகுந்துவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டும். பைபிளில் 7வது கட்டளையை மீறி  விட்டேன்.  ராணுவ  அதிகாரியே என்னை மன்னியுங்கள்’’ என்று எழுதப்பட்டிருந்தது. வீட்டில் நகை உட்பட  விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் வைக்கப்பட்டிருக்கவில்லை. எந்த பொருளையும் திருடன்  திருடவில்லை. ராணுவ வீரரின் வீட்டில் கண்டிப்பாக மது பாட்டில் இருக்கும்  என்று யோசித்த திருடன்  பீரோவில் இருந்த பாட்டிலை எடுத்து ஒரு பெக்  மட்டும் அடித்துவிட்டு சென்றுள்ளான்.

Tags : Write down on the wall, reasonable thief
× RELATED கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது