சபரிமலை மறுசீராய்வு வழக்கு தொடர்ந்து 2வது நாளாக விசாரணை நடக்கவில்லை

புதுடெல்லி: சபரிமலை வழக்கில் தொடர்ந்து 2வது நாளாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவில்லை. சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு செய்யலாம் என்ற தீர்ப்பு மறுபரிசீலனை செய்யக்கோரி பல்வேறு தரப்பில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இதை விசாரிக்கிறது. மேலும், 10 நாட்களுக்கு மேல் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, முதல் நாள் விசாரணை கடந்த 17ம் தேதி தொடங்கியது. அப்போது, முதலாவதாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதிட்டார். மறுநாளும் விசாரணை தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த இரு நாட்களாக விசாரணை நடத்தப்படவில்லை. இதனால், வழக்கு விசாரணை தாமதமாகி வருகிறது.

Related Stories: