சிவானந்தா குருகுல நிறுவனர் மறைவிற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: சிவானந்தா குருகுல நிறுவனர் மறைவிற்கு திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: தொண்டு என்ற சொல்லுக்கு அடையாளமாகவும், அதற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தும் கொண்ட சிவானந்தா குருகுலத்தின் நிறுவனர் பத்ம விருது பெற்ற ராஜாராம் இறப்பு பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

Advertising
Advertising

சமூகத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள்-முதியோர் எனப் பலருக்கும் ஆதரவுக் கரமாக இருந்து மறுவாழ்வு அளித்தவர். என்னுடைய பிறந்தநாளில் அவரது குருகுலத்திற்குச் சென்று அங்கு தங்கியிருப்போருடன் அளவளாவி, நிதியுதவி வழங்கியிருக்கிறேன். அப்போது ராஜாராமின் தூய தொண்டுள்ளத்தையும் சலிப்பில்லாத அர்ப்பணிப்பையும் கவனித்துள்ளேன். அவரது மறைவால் வேதனையில் உள்ள அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆற்றிய தொண்டும் அவர் உருவாக்கிய சேவை அமைப்புகளும் என்றென்றும் நிலைத்திருக்கும். அதில் ராஜாராம் வாழ்ந்து கொண்டிருப்பார். இவ்வாறு இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: