×

டெஸ்ட் தொடர் சவால்

* இந்தியா - நியூசிலாந்து அணிகளிடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டன், பேசின் ரிசர்வ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. வெலிங்டனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த தொடருக்கான கோப்பையுடன் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர்.
*  குஜராத் - கோவா, பெங்கால் - ஒடிஷா, கர்நாடகா - ஜம்மு காஷ்மீர், சவுராஷ்டிரா - ஆந்திரா அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.
* நியூசிலாந்து அணி வீரர் நீல் வேக்னர் தனது மனைவியின் பிரசவத்தின்போது உடனிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்பதால், முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் ரிசர்வ் வீரராக மேட் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார்.
* இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் தொடரில் குளோசெஸ்டர்ஷ்யர் அணிக்காக விளையாட இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
*  துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட இந்தியாவின் சானியா மிர்சா - கரோலின் கார்சியா (பிரான்ஸ்) ஜோடி தகுதி பெற்றுள்ளது.



Tags : Test Series Challenge , Test Series
× RELATED ஹெட் 62, அபிஷேக் 63, மார்க்ரம் 42*, கிளாஸன் 80*...