திறமையற்ற பணியாளர்களை குறைக்கும் வகையில் புள்ளிகள் அடிப்படையில் விசா இங்கிலாந்தில் புதிய திட்டம்

லண்டன்; இங்கிலாந்தில் புள்ளிகள் அடிப்படையிலான விசா திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. திறமையற்ற பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ள இங்கிலாந்து விசா நடைமுறையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. புள்ளிகள் அடிப்படையிலான விசா திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. அந்நாட்டு உள்துறை அமைச்சரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான பிரீத்தி படேல் இந்த திட்டத்தை தொடங்கி ைவத்தார். இத்திட்டம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நடைமுறைக்கு வருகிறது. இதன்படி ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்த யூனியனில் இல்லாத இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சமவாய்ப்பு வழங்குவதாக இந்த விசா திட்டம் இருக்கும்.

 திறமை, கல்வித்தகுதி, தொழில் துறையில் பெறும் புள்ளிகள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபருக்கு விசா வழங்கப்படும். ஆங்கில பேச்சுத்திறமை மற்றும் தொழில்திறமை போன்ற தகுதி கொண்டவர்களுக்கு 50 புள்ளிகள் வழங்கப்படும்.

ஒட்டுமொத்தத்தில் 70 புள்ளிகள் பெற்ற வெளிநாட்டவர் இங்கிலாந்தில் பணிபுரிய தகுதி பெறுவார்கள். நிகழ்ச்சியை தொடங்கி ைவத்து உள்துறை அமைச்சர் பிரீத்தி படேல் பேசியதாவது: இது இங்கிலாந்து வரலாற்றில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். வெளிநாட்டில் உள்ள திறமை மற்றும் தகுதி வாய்ந்தவர்களை பணியில் சேர்க்கும் வகையில் இந்த விசா நடைமுறைப்படுத்த பட உள்ளது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு குடிபெயரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை கணிசமாக குறையும். அதே நேரத்தில் இந்த விசா திட்டம் ஐரோப்பிய யூனியன் மற்றும் யூனியனில் இல்லாத  நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் அதிகப்படியான தொழிலாளர்களை ஈர்க்க முடியாது என குற்றம்சாட்டியுள்ளது.

Related Stories: