அமெரிக்காவில் தமிழருக்கு நீதிபதி பதவி

வாஷிங்டன்: அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக, முதல் முறையாக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளி நீதிபதி சீனிவாசன் கடந்த 12ம் தேதி நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி மெரிக் கார்லண்ட் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கடந்த 2013 மே முதல் சீனிவாசன் கொலம்பியா மாகாண மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இதன் மூலம், அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அடுத்தபடியாக அதிக அதிகாரம் படைத்த நீதிமன்றத்தின் நீதிபதியாகும் முதல் அமெரிக்கவாழ் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவரானார்  சீனிவாசன். இவரை அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க ஒபாமா, அவரது ஆட்சி காலத்தில் செய்த பரிந்துரையை செனட் அவை பரிசீலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: