மாவட்ட நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு

புதுடெல்லி: கீழ் நீதிமன்றங்களில் பணியாற்றிய நீதிபதிகளை, நேரடி பணி நியமனத்தின் கீழ் மாவட்ட நீதிபதிகளாக நியமிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்‌ரா அமர்வு நேற்று இதுதொடர்பான வழக்கில் வெளியிட்ட உத்தரவில், ‘‘நீதிமன்றத்தில் 7 ஆண்டுகள் தொடர்ந்து வழக்கறிஞராக பணியாற்றியவர்களே மாவட்ட நீதிபதிகளாக நியமிக்கத் தகுதி வாய்ந்தவர்கள். மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், ஏற்கனவே மத்திய அல்லது மாநில அரசின் கீழ் பணிபுரிந்து வந்தால், அவர்கள் மாவட்ட நீதிபதி பணிக்கு தகுதியற்றவர்கள். அதே நேரம், வழக்கறிஞராக அல்லது பிளீடராக 7 ஆண்டுகள் பணியாற்றியவரை மாவட்ட நீதிபதியாக நியமிக்க உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தால், அவரை மாவட்ட நீதிபதியாக நியமிக்கலாம்’’ என்று கூறியுள்ளது.

Related Stories: