×

சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்தவர் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய தங்கை திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் இறந்துள்ளார். இதனால் மீனா தனது தங்கையின் இரண்டு பெண் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்து வளர்த்து வந்துள்ளார். இதில் மூத்த மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர். மற்றொரு சிறுமி வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.  கடந்த 2017ம் ஆண்டு சிறுமி வீட்டில் சோகமாக இருந்துள்ளார். இதுகுறித்து மீனா சிறுமியிடம் கேட்டபோது தன்னை பக்கத்து வீட்டில் வசித்து வரும் லக்‌ஷ்மணன் என்கிற வாலிபர் பலாத்காரம் செய்ததாக கூறி, அழுதுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என கூறி உத்தரவிட்டார். எனவே வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Plaintiffs , Juvenile rape case, Plaintiff, 10 years in prison, Boccio Court
× RELATED கூலித்தொழிலாளி கொலை வழக்கில் 3 வாலிபர்கள் போலீசில் சரண்