வாட்ஸ் அப், வீடியோ காலில் அருவியாக கொட்டி ஆபாச பேச்சு: கள்ளக்காதலி உட்பட 40 பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த திருச்சி வங்கி ஊழியர்

தஞ்சை: மணப்பாறையை சேர்ந்த வங்கி ஊழியர் 40 பெண்களை மயக்கி உல்லாசமாக இருந்த வீடியோவை அவரது மனைவி கோர்ட்டில் ஒப்படைத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (36). புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த பட்டதாரி பெண் தாட்சர் (32) என்பவருக்கும் கடந்த டிசம்பர் 2ம் தேதி திருமணம் நடந்தது. முதலிரவில் மனைவியை பிரிந்து தனி அறையில் எட்வின் ஜெயக்குமார் செல்போனில் விடிய விடிய பேசிக்கொண்டிருந்தார். இவ்வாறு தினம்தோறும் அவரது தனி அறையில் பல பெண்களிடம் செல்போனில் ஆபாசமாக பேசி வந்ததும், தன்னுடன் நெருங்காமல் தவிர்த்து வந்ததும் கணவர் மீது தாட்சருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

Advertising
Advertising

இந்நிலையில், கணவர் வங்கிக்கு வேலைக்கு சென்ற நிலையில், அவரது அறையை தாட்சர் சோதனையிட்டார். அப்போது அந்த அறையில் 15 செல்போன்கள் இருந்தது. அந்த செல்போன்களில் கணவர் மற்றும் பல பெண்கள் நிர்வாண நிலையில் உள்ள படங்கள், பல பெண்களை அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வங்கி வாடிக்கையாளர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் இருந்தது. மேலும் செல்போன்களின் வாட்ஸ் அப்பில் பல பெண்களிடம் உல்லாசத்தில் ஈடுபட வற்புறுத்தும் குறுஞ்செய்திகள் மற்றும் எட்வின் ஜெயக்குமார் பாத்ரூமில் நிர்வாணமாக நின்றபடி பல பெண்களுடன் வீடியோ கால் பேசி அதை செல்போனில் பதிவு செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தனது மாமியார், கணவரின் தங்கை, அவர்களது உறவுக்கார பெண் ஆகியோரிடம் தனது கணவர் பற்றி தாட்சர் கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. தனது அந்தரங்கங்கள் தெரிந்து விட்டதை தனது தாய் மூலம் அறிந்து கொண்ட எட்வின் ஜெயக்குமார், வீட்டுக்கு வந்து மனைவியை திட்டினார். இந்நிலையில் அதே வங்கியில் பணியாற்றும் தேவி பிலோமினா தனது கணவரின் கள்ளக்காதலி என்பதையும் அறிந்து கொண்டு தாட்சர் கேட்டபோது, கணவர் சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் நீ குளிக்கும்போது ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துள்ளேன். இதே வீடியோ தனது கள்ளக்காதலியிடம் உள்ளது. எங்களை பற்றி வெளியே சொன்னால் அந்த வீடியோ, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து தாட்சர் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது பெற்றோர் வந்து ஜெயக்குமாருடன் பேசியுள்ளனர்.

தனது அந்தரங்கத்தை மனைவி வெளியே சொல்லி விட்டதால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார், மனைவியை 2 முறை வெளியே ஆலயத்துக்கு அழைத்து சென்று கொலை செய்ய முயற்சித்துள்ளார். இக்கொலை முயற்சியில் இருந்து தப்பிய தாட்சர், வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். ஆனால் அப்பெண்ணின் புகாரை எஸ்ஐ சாந்தி மற்றும் போலீசார் வாங்க மறுத்துள்ளனர். இதனால் தஞ்சை சரக டிஐஜி லோகநாதனிடம் புகார் செய்தார். இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் எட்வின் ஜெயக்குமார், அவரது தாய் லில்லி ஹைடா, சகோதரி கேத்தரின் நிர்மலாமேரி, உறவினர் ரீட்டா, வங்கி ஊழியர் தேவி பிலோமினா ஆகிய 5 பேர் மீது வல்லம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் எட்வின் ஜெயக்குமார், மதுரை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தாட்சர், கணவரின் அந்தரங்க புகைப்படங்கள், ஆபாச வீடியோக்களை மதுரை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். மனுவை விசாரித்து எட்வின் ஜெயக்குமார் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளை பதிவு செய்து உடனடியாக கைது செய்ய மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 7ம் தேதி எட்வின் ஜெயக்குமார் உட்பட 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து வல்லம் அனைத்து மகளிர் போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் தேடுவதை அறிந்த எட்வின் ஜெயக்குமார் தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: