×

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: கைதான ஜெயக்குமார், ஓம்காந்தன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸ் 6 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்ட ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனுக்கு 6 நாள் காவல் விதித்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஜெயகுமாரிடம் சிபிசிஐடி போலீஸ் 7 நாள் விசாரணை நடத்தி உள்ள நிலையில் அவரை மீண்டும் 6 விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட ஓம்காந்தனையும் போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக இதுவரை 47 நபர்கள் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் முக்கிய மூளையாக செயல்பட்ட ஜெயக்குமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி அலுவலக பணியாளர் ஓம்காந்தன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இருவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, இருவரும் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளிலும் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இருவர் மீதும் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது புதிதாக வேறு வழக்குகள் பதிவு செய்து கைது செய்து இருப்பதால், இந்த வழக்குகளில் அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர். குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் ஏற்கனவே கைதான ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது இருவரையும் 7 காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி சிபிசிஐடி தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தன் ஆகிய இருவருக்கும் 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, போலீஸ் காவலில் இருந்து தங்களை மதுரைக்கு அழைத்து செல்லும் போது கண்ணை கட்டி அழைத்து சென்றதாகவும், மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றதாகவும், அங்குள்ள சில சிபிசிஐடி போலீசார் தங்களை கொடுமைப்படுத்தியதாகவும் மாஜிஸ்திரேட்டிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து துன்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என சிபிசிஐடிக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினர்.


Tags : CBIIT ,Jayakumar , DNBSC, Jayakumar, Omkandan, CBCID, 6 day custody, clearance
× RELATED எண்ணி முடிக்கவே 2...