ஹைதராபாத்தில் வசிக்கும் 127 பேர் குடியுரிமையை நிரூபிக்கும்படி ஆதார் ஆணையம் நோட்டீஸ் : வலுக்கும் எதிர்ப்புகள்

ஹைதராபாத் : ஹைதராபாத்தில் வசிக்கும் 127 பேர் குடியுரிமையை நிரூபிக்கும் படி ஆதார் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து உள்ளது.போலிச் சான்றிதழ்கள்  மூலம் ஆதார் அட்டை பெற்றதாக கூறி 127 பேருக்கு ஆதார் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் உரிய ஆதாரங்களுடன் மே மாதத்திற்குள் நேரில் ஆஜராகி தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குடியுரிமையை நிரூபிக்க ஆஜராகாத பட்சத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியர் அல்லாதவர்கள் இருந்தால் இந்தியாவிற்குள் சட்டப்பூர்வமாக வந்ததை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியுரிமை சான்றிதழ் கேட்க ஆதார் அமைப்பிற்கு அதிகாரம் உள்ளதா என்று ஐதராபாத்தைச் செர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒவைஸி கேள்வி எழுப்பியுள்ளார். நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுவடைந்து வரும் சூழலில் குடியுரிமையை நிரூபிக்க கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்,

Related Stories: