×

நாளை மறுநாள் முதல் டெஸ்ட் தொடக்கம் கோஹ்லிதான் எனது முதல் இலக்கு: களத்துக்கு வரும் நியூசி. பவுலர் பேட்டி

வெலிங்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட், சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடியபோது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், இந்தியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான நியூசிலாந்து அணியில் போல்ட் இடம் பெறவில்லை. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் (பிப். 21) வெலிங்டனில் ஏக்லி ஓவல் அரங்கத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் டிரென்ட் போல்ட் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்துவதற்காக வெயிட் பண்ண முடியாது என்று டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘நான் போட்டியில் விளையாடும்போது விராட் கோஹ்லி போன்ற முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் விரும்புவேன். எனக்குள்ளே இப்படியொரு எண்ணத்தை உருவாக்கிக் கொள்வேன். அதனால், விராட் கோஹ்லியின் விக்கெட்டை எடுக்க காத்திருக்க முடியாது. அதேசமயம், கோஹ்லி தலைசிறந்த வீரர். அவர் எப்படி சிறப்பான ஆட்டத்தை விளையாடுவார் என்பது அனைவருக்கும் தெரியும்” என்றார்.


Tags : Test ,Kohli ,field ,New Zealand ,Bowler , First Test, Kohli, First Goal, NYC. Bowler
× RELATED தேர்தல் பறக்கும்படை சோதனை; ராஜபாளையத்தில் ₹3.33 லட்சம் பறிமுதல்