×

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் பிப். 24ல் டிரம்ப் திறந்துவைப்பு: கழுகு பார்வை படத்தை வெளியிட்டது பிசிசிஐ

அகமதாபாத்: உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குஜராத் மாநிலம் கிரிக்கெட் சங்கம் உருவாக்கியுள்ளது. அது, அகமதாபாத்தில் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானம் என்ற பெயரில் உள்ளது. இந்த மைதானம் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் உருவாகி இருக்கிறது. தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மைதானமே உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும். இங்கு ஒரு லட்சத்து 24 பேர் அமர்ந்து விளையாட்டை கண்டுரசிக்கலாம். ஆஸ்திரேலியாவின் மைதானத்தை பின்னுக்குத் தள்ளும் விதமாக அகமதாபாத் மைதானம் உருவாகி வருகிறது.

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வருகிற 24ம் தேதி இந்தியா வருகிறார். அதையடுத்து, மொடேராவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் வல்லபாய் படேல் மைதானத்தில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மைதானத்தை அதிபர் டிரம்ப் திறந்து வைக்கவுள்ளார். தற்போது இந்த மைதானத்தின் கழுகு பார்வை படத்தை பிசிசிஐ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Tags : Pip ,cricket ground ,world ,BCCI , Cricket Ground, Trump, Eagle View Picture,, BCCI
× RELATED தமிழ்நாட்டின் 2 ஆவது சர்வதேச...