திருவில்லி அருகே கம்மாபட்டியில் குற்றச் செயல்களை தடுக்க தெருக்களில் சிசிடிவி கேமரா: குடியிருப்புவாசிகள் ஏற்பாடு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே கம்மாபட்டியில் தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க அப்பகுதி மக்களே இணைந்து சுமார் 2.50 லட்சம் மதிப்பீட்டில் 26 சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனர். திருவில்லிபுத்தூர் அருகே கம்மாபட்டி பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மர்ம நபர்கள் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertising
Advertising

தொடர் கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்கவும் கம்மாபட்டி பகுதி மக்கள் ஒன்றிணைந்து அவர்களது சொந்த செலவில் சுமார் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் கம்மாபட்டியில் உள்ள பல்வேறு தெருக்களில் 26 சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இதனால் குற்ற சம்பவங்கள் தடுக்க முடியும். யாராவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் பதிவான காட்சிகளின் மூலம் கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: