சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.312 உயர்ந்து ரூ.31,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிக்கொண்டு வருகிறது. அமெரிக்க டாலரின் விலையில் ஏற்படும் மாற்றமே சர்வதேச தங்கத்தின் விலையை நிர்ணயிக்கிறது. அதை பொருத்து இங்கும் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் அதன் விலையை பொறுத்து மாற்றத்துக்கு உள்ளாகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் முழுக்க தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏறுவதும், அடுத்த நாள் பெயரளவுக்கு குறைவதுமான நிலை நீடித்தது.