×

மத்திய அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தபாஸ் பால் மரணம்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக, அழுத்தம் தந்து பலரையும் மத்திய அரசு கொலை செய்து வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி  குற்றம்சாட்டியுள்ளார். மேற்குவங்கத்தில் நடந்த நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பல திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குற்றவாளிகளாக  சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில், மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் பிறந்த தபஸ் பால், வங்காள திரையுலகில் புகழ் பெற்றவராக விளங்கினார்.  பின்னர், அவர் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு எம்பி.யானார். கடந்த 2016ம் ஆண்டு ரோஸ் வேலி நிதி நிறுவன  மோசடி தொடர்பாக சிபிஐ அவரை கைது செய்தது.

இதனால், திரையுலகம், அரசியலில் இருந்து விலகினார். இதயநோய் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர், 2 ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்த நிலையில், நேற்று அவர் இறந்தார்.
இவரது மரணம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி  கண்டனத்திற்குரியது. இதில் யாரும் தப்பவில்லை. அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக 3 மரணங்களை பார்த்து விட்டேன். சட்டம் அதன் வேலையை பார்க்க  வேண்டும். ஆனால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் இது போன்ற அவமானங்களும், பிரசாரங்களும் மக்களின் வாழ்க்கையை முடித்து விடுகிறது.

மத்திய அரசின் அமைப்புகளால் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அழுத்தம் மற்றும் நெருக்கடி காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்து  விட்டனர். இந்த அமைப்புகள் தனிமனிதனின் மனநிலையை எவ்வாறு நிலை குலைய வைக்கும் என்பதை தபாஸ் பாலின் மரணம் சொல்லும். எந்த தவறும்  செய்யாமலேயே மக்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். யாராவது தவறு செய்திருந்தால் அவர்கள் நடவடிக்கைகளை எதிர்கொள்ளட்டும். ஆனால் தபாஸ்  பாலும் மற்றவர்களும் என்ன தவறு செய்தார்கள் என எங்களுக்கு இதுவரை தெரியவில்லை என்றார்.

Tags : death ,Mamata Banerjee ,government ,Central Government , Mamata Banerjee alleges death of tapas due to political corruption in central government
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...