வாகன ஓட்டிகளுக்கே தெரியாதபடி கண்துடைப்புக்காக வன விலங்குகள் குறித்த எச்சரிக்கை பெயர்பலகை: இரவிலும் தெரியும்படி வைக்க கோரிக்கை

பெரம்பலூர்: வாகன ஓட்டிகளுக்கே தெரியாதபடி கண்துடைப்புக்காக வன விலங்குகள் குறித்த எச்சரி க்கை பெயர்ப்பலகையை, இரவிலும் தெரியும்படி வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் மையத்திலுள்ள பெரம்பலூர் மாவட்டத்தின் நடுவே செல்லும் முக் கிய சாலையாக என்ஹெச் -45 எனப்படும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் பெரம்பலூர் அருகே செங்குணம் பிரிவு ரோடு அருகே கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடர் விபத்துகள் நடந்தபடி இருந் தன. இதனால் பொது மக்களின் நலன்கருதி, செங்கு ணம் பிரிவு ரோட்டிலுள்ள தேசியநெடுஞ்சாலை சென்டர் மீடியன் வழியை வாகனங்கள் செல்லாதவாறு சிமெ ண்டுத் திண்டு தடுப்புகள் கொண்டு தடுக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட் டிகள் உயிரிழப்பு குறைந்துள்ளது.

ஆனால் வன உயிரினங்கள் அடிக்கடி பலியாகி வருவது குறைந்த பாடில்லை. இந்தப் பகுதியில் திருமங் கலிஅம்மன் கோயில் உள் ளது. இப்பகுதி அடர்ந்த வனப்பகுதி போல் உள்ள தால் இங்குவனத்தில் வாழ வேண்டிய உயிரினங்களா ன மான்,மயில்,குரங்கு உள்ளிட்ட வன உயிரினங்கள் அதிகப்படியாக வசித்து வருகின்றன. இந்த வன உயிரினங்கள் இப்பகுதியின் மேற்கே பெரம்பலூர்- எளம்பலூர் ரோட்டில் உப் போடை பகுதியிலும், கிழக்கே செங்குணம் சித்தம்பலம் சுவாமி - ஆகாசதுரை சுவாமி கோவில், அருமடல் செங்காமுனிவர் கோவில் அருகே உள்ள ஓடை உள்ளிட்ட சுற்று வட்டாரத்தின் வெவ்வேறு பகுதிகளில் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் சுற்றித் திரிந்து வருகின்றன. இதேபோல உணவுக்காக விவசாய நிலங்களில் விளைந்த தானியங்களை இந்த வன உயிரினங்கள் சேதப்படுத்தியே வருகிறது.

இதில் அதிகப்படியான மான்கள் இப்பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயலும்போது வாகனங்கள் மோதி உயிரிழக்கும் சம்பவம் இப்பகுதியில் அடிக்கடி நிகழ்கிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் பார்வைக்காக, தேசிய நெடுஞ்சாலையில், செங்குணம் பிரிவுரோட்டுக்கு தென்பகுதி சாலையின் சென்டர் மீடியன் கட்டையில் செடிகளுக்கு நடுவே “வன விலங்குகள் சாலையைக் கடக்கும்பகுதி - கவனமாக செல்லவும்” என தேதிய நெடுஞ்சாலைத்து றையினர் ஏதோ கடமைக்காக, கண்துடைப்புக்காக சிறிய அளவில் டிஜிட்டல் பேனரைக் குச்சியில் கட்டி வைத்துள்ளனர்.

பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் இப்பகுதியில் வன உயிரினங்கள் வாக னங்கள் மோதி பலியாகி வருகின்றன. எனவே வன உயிரினங்கள் உயிர் சேதத் தைத் தடுக்கும் வகையில் இப்பகுதி சாலையின் இரு பகுதிகளிலும் இரவில் வெ ளிச்சம் உள்ள இடத்தில் வா கன ஓட்டிகளின் பார்வையில் தெரியும்படி பெரிய அளவில், இரும்பிலான நிர ந்தர தகவல் பலகையாக வைக்கவேண்டும்என மாவ ட்ட நிர்வாகம் மற்றும் தேசி ய நெடுஞ்சாலைத் துறைக் கும், வனத்துறைக்கும் பொ துமக்கள், வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: