நடப்பு சந்தை பருவத்தில் நாட்டின் சர்க்கரை உற்பத்தி 22% சரிவு: இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தகவல்

டெல்லி: நாட்டின் சர்க்கரை உற்பத்தி நடப்பு சந்தை பருவத்தில் இதுவரையிலான காலகட்டத்தில் 22 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது. அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான சந்தை பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 22 விழுக்காடு சரிந்து 1 கோடியே 70 லட்சம் டன்னாக குறைந்துள்ளதாக இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது. 2015 - 2016ம் ஆண்டு சந்தை பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 2 கோடியே 51 லட்சம் டன்னாக இருந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதுவே அடுத்து வந்த 2016 - 2017ம் ஆண்டு சந்தை பருவத்தில் 2 கோடியே 3 லட்சம் டன்களாகவும், 2017 - 2018ம் ஆண்டு சந்தை பருவத்தில் புதிய சாதனை அளவாக 3 கோடியே 25 லட்சம் டன்களாகவும் உள்ளது. இதனை தொடர்ந்து, 2018 - 2019ம் ஆண்டு சந்தை பருவத்தில் 3 கோடியே 31 லட்சம் டன்களாகவும் சர்க்கரை உற்பத்தி இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நடப்பு 2019 - 2020ம் ஆண்டு சந்தை பருவத்தில் பிப்ரவரி 15ம் தேதி வரையிலான 5 மாதங்களில் சர்க்கரை உற்பத்தி 1 கோடியே 70 லட்சம் டன்களாக இருப்பதாக சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, மகாராஷ்டிரா,  கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சர்க்கரை உற்பத்தி குறைந்ததால் நாட்டின் ஒட்டுமொத்த சர்க்கரை உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதே மாநிலத்தில் சர்க்கரை உற்பத்தி சரிவிற்கு காரணமாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தி 82 லட்சம் டன்னில் இருந்து 43 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. சர்வதேச அளவில், சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் நாடு முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: