×

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் : ஹைட்ரோகார்பன் திட்டங்களின் நிலை குறித்து ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பதில்

சென்னை : காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லை நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், வேளாண் மண்டல அறிவிப்பை சுட்டிக்காட்டி, ஹைட்ரோகார்பன் திட்டங்களின் நிலை என்ன? என கேள்வி எழுப்பினார்.

ஸ்டாலின் பேச்சு
 
திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது பின்வருமாறு, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த போது, புதிய ஹைட்ரொ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று சொல்லப்பட்டதே தவிர ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து குறிப்பிடவில்லை, இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்திலும் குறிப்பிடப்படவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரும் உரிய பதில் அளிக்கவில்லை. டெல்டா மாவட்டங்களில் புதிய திட்டங்கள் வராத வகையில் ஒரு சட்ட முன்வடிவை ஏன் அரசு இதுவரை கொண்டு வரவில்லை.அப்படி வலியுறுத்தினால் திமுக நிச்சயமாக முழு அளவில் ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்


இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகள் வந்த நிலையில், அதனை அறிவித்ததாகவும் அதற்கு உண்டான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். மேலும் இதில் பிரச்சனைகள் இருப்பதால் சரியான முறையில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து தான் இதனை அமல்ப்படுத்த முடியும் என்றும் விரைவில் விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் நல்ல செய்தி வரும் பழனிசாமி தெரிவித்தார்.

Tags : district farmers ,Cauvery Delta ,Stalin , Stalin, Speaker, Chief Minister, Edappadi Palanisamy, Lawyer
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை