சென்னையில் நெரிசல் மிகுந்த 15 இடங்களில் மேம்பாலம் : மாநகராட்சி திட்டம்

சென்னை : சென்னையில் 14 மேம்பாலங்களில் வண்ண விளக்குகள் அமைக்கும் பணி மற்றும் 8 கோடி மதிப்பீட்டில் வெர்டிகல் கார்டன் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலையை இணைக்கும் வகையில் 6 மேம்பாலம், கோயம்பேடு விருகம்பாக்கத்தை இணைக்கும் மேம்பாலம் அமைக்கவும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள 9 இடங்களில் நடைமேம்பாலம் அமைக்க ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தொடர்ந்து, போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள 15 இடங்களில் மேம்பாலம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Advertising
Advertising

இதன்படி ஐசிஎப் சந்திப்பு, ஜிபி சாலை சந்திப்பு, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, கெல்லீஸ் சாலை, அயனாவரம் சாலை, ஓட்டேரி சாலை, பேசின் பாலம் சாலை, என்எம் சாலை, தேனாம்பேட்டை சந்திப்பு, ஆர்.ஏ.புரம் சாலை, நந்தனம் சாலை, கீரீன்வேஸ் சாலை, எஸ்.ஆர்.பி டூல்ஸ், குருநானக் சாலை உள்ளிட்ட 15 இடங்களில் மேம்பாலம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.  இதற்காக 1500 கோடியில்  திட்டம் தயாரிப்பட்டுள்ளது. அரசு அனுமதிக்கு பிறகு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: