புழல் ஏரியில் சடலம் மீட்பு

புழல்: புழல் ஏரியில் மிதந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். செங்குன்றம் பாதுகாப்பு அலுவலர்கள் குடியிருப்பு அலுவலகம் பின்புறம், புழல் ஏரியில் ஆண் சடலம் மிதப்பதாக நேற்று காலை செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertising
Advertising

அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த அடையாள அட்ைடயை வைத்து விசாரித்தபோது, மேற்கு முகப்பேரை சேர்ந்த ரவிச்சந்திரன் (62) என்பதும், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் என்பதும் தெரிந்தது. இவர், புழல் ஏரிக்கரையில் நடைபயிற்சி செல்வதாக கூறிவிட்டு வந்துள்ளார். எனவே, நடைபயிற்சியின்போது தவறி ஏரிக்குள் விழுந்து இறந்தாரா, அல்லது வேறு ஏதாவது காரணமாக என்ற கோணங்களில் விசாரிக்கின்றனர்.

Related Stories: