காவலர் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் மனைவி தர்ணா

அண்ணாநகர்: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சத்தியவாணி (27) என்பவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தர். அதில்,  சிவகங்கை மாவட்டம் மேலப்பூவந்தி கிராமத்தை சேர்ந்த காவலர் ராஜா என்பவரை காதலித்து 2 ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்து கொண்டேன்.

Advertising
Advertising

தற்போது,எனது கணவர் எனக்கு தெரியாமல் உறவுக்கார பெண் ஒருவரை 2வது திருமணம் செய்து கொண்டது எனக்கு தெரியவந்தது. இதுபற்றி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2.11.2019ம் தேதி புகார் அளித்தேன். ஆனால் நடவடிக்கை இல்லை. எனவே, கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனகூறப்பட்டு இருந்தது.  இந்நிலையில், நேற்று திருமங்கலம் காவல் நிலையம் வந்த சத்தியவாணி, தனது புகார் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.  இதனால், பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories: