இந்திய பறவை இனங்கள் எண்ணிக்கை குறைந்தது: மயில்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

காந்திநகர்: இந்திய பறவை இனங்களின் எண்ணிக்கை 79 சதவீதமாக குறைந்துள்ளதாக 2020ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.  குஜராத் மாநிலம், காந்தி நகரில், இடம் பெயரும் வனஉயிரினங்கள் பாதுகாப்பு குறித்த 13வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு இடையே 2020ம் ஆண்டு இந்தியாவின் பறவைகள் குறித்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: தற்போதைய சூழலில் இந்திய பறவை இனங்களின் எண்ணிக்கை 79 சதவீதமாக குறைந்துள்ளது. நாடு முழுவதும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையானது குறைந்து வருவதாக கருத்து நிலவுகின்றது. ஆனால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து தோராயமாக நிலையாகவே உள்ளது. கிராம பகுதிகளில் அதன் எண்ணிக்கை அதிகமாகவும், நகர் பகுதிகளில் குறைந்தும் வருகின்றது. கடந்த 25ஆண்டுகளுக்கும் அதிகமாக அதன் எண்ணிக்கை நிலையாகவே உள்ளது.

 நாட்டில் உள்ள 867 பறவை இனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் 79 சதவீத பறவைகளின் தற்போதைய நிலை குறித்தும், 50 சதவீத பறவை இனங்கள் நீண்ட காலமாகவும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 101 பறவை இனங்கள் உயர் பாதுகாப்பு அளிக்க வேண்டிய இனங்களாக கண்டறியப்பட்டுள்ளது. சில இடங்களில் விளை நிலங்களை மயில்கள் நாசம் செய்வது அதிகரித்து விட்டதாக செய்திகள் வருவதை கேள்விப்பட்டுள்ளோம். இது ஒரு மகிழ்ச்சியான விஷயம். அதாவது  இந்திய மயில்களின் எண்ணிக்கையானது  அதிகரித்து வருகின்றது. பறவை கண்காணிப்பாளர்கள் மூலமாக ஆன்லைனில் பதிவிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், 48 சதவீத பறவை இனங்கள் தொடர்ந்து நிலையான எண்ணிக்கையில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 79 சதவீத இனங்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது. 146 பறவை இனங்களில் 80 சதவீத இனங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.

50 சதவீதம் கடுமையாக குறைந்து வருகின்றது. 261 இனங்களை நீண்ட நாட்கள் ஆய்வு செய்ததில் 2000ம் ஆண்டு முதல் 52 சதவீத பறவை இனங்கள் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன. 22 சதவீத இனங்கள் வேகமாக குறைந்து வருகின்றன. ஒட்டுமொத்த பறவை இனத்தில் 43 சதவீத இனங்களின் எண்ணிக்கை நிலையாக உள்ளது. 5 சதவீத இனங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: