புதிய விமானம் நிலையம் அமைப்பது உட்பட உத்தர பிரதேச பட்ஜெட்டில் அயோத்திக்கு முன்னுரிமை

லக்னோ: உத்தரப் பிரதேச பட்ஜெட்டில், அயோத்தி ராமர் கோயில் திட்டத்தை மையப்படுத்தி பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. தற்போது, இம்மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில், நேற்று 2020-2021ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா தாக்கல் செய்தார்.   இதில், பிரமாண்டமான ராமர் கோயில் அமையவிருக்கும் அயோத்தியை மையப்படுத்தி பல கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அயோத்தியில் புதிய விமான நிலையம் அமைக்க 500 கோடி, காசி விஸ்வநாதர் கோயிலை  அழகுப்படுத்த, விரிவாக்க 200 கோடி, வாரணாசியில் கலாசார மையம்  உருவாக்க 180 கோடி, புனித நகரான அயோத்தியை சுற்றுலாத் தலமாக உயர்த்துவதற்காக 85 கோடி, துளசி சமாரக் பவனை சீரமைக்க 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கடந்தாண்டு பட்ஜெட்டை விட 33,159 கோடி அதிகமாகும். அதே நேரம், இதில் புதிய திட்டங்களுக்காக மட்டும் 10,967.87 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: