பிரிண்டிங் சங்கத்துடன் கமிஷனர் ஆலோசனை

சென்னை: சென்னையில் உரிய அனுமதி பெற்றுதான் பேனர்வைக்க வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும் பேனர்களை அச்சிடும் போது  அனுமதி எண், அனுமதி அளிக்கப்பட்ட நாள்,  எண்ணிக்கை, அனுமதி அளிக்கப்பட்ட அளவின் விவரம், அனுமதிக்கான கால அவகாசம், அச்சகத்தின் பெயர் ஆகியவற்றை கண்டிப்பாக அச்சிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த விதியை பின்பற்றாத அச்சகங்கள் சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக டிஜிட்டல் பேனர் பிரிண்டிங் சங்கம் மற்றும் சங்க உறுப்பினர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் காவல்துறை கூடுதல் ஆணையர் ஜெயராமன், துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன், வட்டார துணை ஆணையர்கள் கலந்து ெகாண்டனர். இதில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

Related Stories: