×

டிரம்ப் பயணிக்கும் வழியில் வசிக்கும் குடிசை பகுதி மக்களை காலி செய்ய நோட்டீஸ்?

அகமதாபாத்:  அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு மொடேரா குடிசை பகுதி மக்களுக்கு அந்த இடத்தை விட்டு காலி செய்யும்படி நகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் 24, 25ம் தேதிகளில் இந்தியாவில் 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். வரும் 24ம் தேதி குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் உள்ளிட்ட இடங்களை அவர் பார்வையிட உள்ளார். இதற்காக அவர் பயணிக்கும் வழிகளில் அவரை கவரும் வகையில் புதிதாக சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த சாலையோரத்தில் குடிசை பகுதிகள் அமைந்துள்ளதால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது. மொடேரா பகுதியில் அமைந்துள்ள குடிசைவாசிகள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என அகமதாபாத் நகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இங்கு 45 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நகராட்சி அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

Tags : slum dwellers ,Trump , Notice to evacuate slum dwellers ,living on the way ,Trump travels?
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்