3 ஆண்டில் 35,000 ஊழியர்களுக்கு கல்தா : எச்எஸ்பிசி வங்கி அதிரடி

ஹாங்காங்/லண்டன்: சர்வதேச அளவில்  எச்எஸ்பிசி வங்கி ரூ.7 லட்சம் கோடி  முதலீட்டை முடிவு செய்துள்ளது. 3 ஆண்டுகளில் 35,000 பேரை பணி நீக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த எச்எஸ்பிசி வங்கி, ஆசிய நாடுகளில் உள்ள தனது கிளைகளை எல்லாம் ஹாங்காங்கில் உள்ள தலைமையகம் மூலம் இயக்கி வருகிறது. கடந்த 2008ம் ஆண்டில் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கிடியில் சிக்கி எச்எஸ்பிசி வங்கி தடுமாறியது. இதையடுத்து, தனது தனியார் வங்கி சேவை கிளைகள் மற்றும் முதலீடு தொழில்களை ஒன்றாக இணைத்து நஷ்டத்தை குறைக்க நடவடிக்கை எடுத்தது. அதன் பின்னர், அதுபோன்ற ஒரு நிலை வங்கிக்கு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் வங்கியின் தொழிலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதுபோல் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் இங்கிலாந்தின் முடிவால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மற்ற வங்கிகளுடன் போட்டி போட்டு தொழில் செய்வது பெரும் சவாலாக மாறியது. இதையடுத்து, தனது முதலீட்டில் சுமார் 100 பில்லியன் டாலர் (ரூ.7 லட்சம் கோடியை) திரும்பப் பெறவும், தனது மொத்த வங்கி ஊழியர்கள் 2,35,000 பேரில் சுமார் 2 லட்சம் பேரை மட்டும் வைத்துக்கொண்டு அடுத்த மூனறு ஆண்டுகளில் சுமார் 35,000 பேரை நீக்குவது என்றும் முடிவு செய்துள்ளது.இவ்வாறு வங்கியின் இடைக்காலத் தலைவர் நோயல் கியூன் தெரிவித்துள்ளார்.

Related Stories: