×

வீழ்ச்சி தலைவிரித்தாடும் நிலையில் 2025ல் பொருளாதாரம் ஏறுமுகம் தானாம்

* இங்கிலாந்தை தாண்டி இந்தியா சாதிக்கும்
* ஆய்வு அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: கடும் பொருளாதார வீழ்ச்சியில் தத்தளிக்கும் இந்தியா, இன்னும் 5 ஆண்டில் மீள்வது மட்டுமல்ல, ஜப்பான், இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிவிடும் என்று சர்வதேச ஆய்வு அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் கடந்த சில ஆண்டாகவே, பொருளாதார வளர்ச்சி பல மடங்கு சரிந்து வருகிறது. தொழில்கள் முடங்கி விட்டன. பல லட்சம் பேர் வேலை இழந்து வருகின்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் சரிந்து வருகிறது. ரூபாய் மதிப்பு வேகமாக இறங்கி விட்டது. இந்த நிலையில், மத்திய அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாலும், ஜிடிபி சதவீதம் ஐந்தை தாண்டுவதே சிரமம் என்ற நிலை தான் காணப்படுகிறது. எனினும், வரும் ஆண்டுகளில் நிலைமை மாறலாம் என்று கணிப்பகள் கூறுகின்றன. லண்டனை சேர்ந்த சர்வதேச ஆய்வு அமைப்பு ஐஎச்எஸ் மார்க்கிட் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டுகளில் இருந்ததைவிட இந்தியாவின்  ஜிடிபி உயரும்; தொடர்ந்து வளர்ச்சி அடைந்து 2023ல்  7 சதவீதம் என்ற அளவில் இருக்கும் . இதன் மூலம்,  உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழும் என்று மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம்  2025ம் ஆண்டில் இங்கிலாந்தைவிட முன்னேற்றம் பெற்றுவிடும். அதேபோல் ஆசியாவில் ஜப்பானைவிட முன்னேற்றம் பெற்று 2வது இடத்தைப் பிடித்துவிடும் என்றும் மதிப்பிட முடிகிறது.

பிரதமர் மோடியின் 2வது ஆட்சியில், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வங்கிகளின் வாராக்கடன் சுமையைக் குறைக்கவும் கடன் கொடுப்பதை அதிகரிக்கவும் வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. நாட்டின் ஜிடிபி வளர்ச்சியில் உற்பத்தி துறையின் பங்கு  25 சதவீதமாக இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து 18 சதவீதமாக இருக்கிறது. இதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் மனித உழைப்பில் அடுத்த 20 ஆண்டுகளில் ஆண்டிற்கு சராசரியாக 75 லட்சம் பேர் பணியில் சேர்வார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் மற்றும் போதிய வேலையின்மை ஆகிய பிரச்னைகளில் இருந்து மீள்வதற்கும் வேலைவாய்ப்பை உருவாக்கவும் மத்திய அரசுக்கு அதிக அளவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், உற்பத்தி மற்றும் சேவை துறையில் வேலைவாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : fallout , economy is set to peak ,n 2025, fallout predicted
× RELATED மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த...