×

வீரநாராயணமங்கத்தில் ஆபத்தான ஆலமரம் அகற்றப்படுமா?

ஆரல்வாய்மொழி: தாழக்குடி அருகே உள்ள வீரநாராயணமங்கலம் பகுதி வழியாக தேரேகால் கால்வாய் செல்கின்றது. இக்கால்வாயின் கரையோரம் பல ஆலமரங்கள் உள்ளன. இதில் வீரநாராயணம்மங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஆலமரத்தின் அடிப்பகுதியின் ஒரு பக்கம் காய்ந்துவிட்டது. மேலும் இம்மரத்தின் அருகில் அதிகமாக குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில் நேற்று இப்பகுதியில் கிடந்த குப்பையில் தீ பிடித்தது. இந்த தீ ஆலமரத்தின் காய்ந்த பகுதியில் பிடித்தது. அங்கு உள்ள மக்கள் இதை கவனித்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர்.

ஆனால் தீயை அணைக்க முடியாததால் தாழக்குடி பேருராட்சி முன்னாள் துணைதலைவர் ரவிபிள்ளைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் தீயணைப்பு நிைலயத்துக்கும், செயல்அலுவலர் யோகஸ்ரீக்கும் தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் மரத்தின் அடிப்பகுதி தீயில் எரிந்தது. இதனால் மரம் சாய்ந்த நிலையில் நிற்கிறது. இம்மரத்தின் அருகே வீரநாராயணமங்கலத்தில் இருந்து கன்னியாகுமரி, தேரூர், கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர்  செல்கின்ற கூட்டு குடிநீர் திட்டத்திற்கு  தேவையான உயர் மின்னழுத்த மின்சாரம் செல்கின்ற மின் கம்பி செல்கின்றது. மரம்  கீழே விழுந்தால் இந்த உயரழுத்த மின் கம்பிகள் துண்டாகும் அபாயம் உள்ளது.

அதோடு மின் கம்பிங்கள் கால்வாயில் விழுந்தால் பெரும் விபரீதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் நிற்கும் ஆலமரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Heroic, dangerous tree
× RELATED 100 ஆண்டு அரச மரம் தீப்பற்றி எரிந்தது