கொஞ்சம் சிரிங்க பாஸ்

நன்றி குங்குமம் முத்தாரம்

நவீன வாழ்க்கையில் நாம் மறந்துவிட்ட விஷயங்களில் முக்கியமானது சிரிப்பு. இந்தச் சிரிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ ஆய்வு சொல்கிறது. தினமும் சிரியுங்கள்... அது உண்மையாக இல்லாமல் கூட இருக்கட்டும். அந்தச் சிரிப்பு உங்களின் மூளைக்கு மகிழ்ச்சியை ஊட்டி புத்துணர்வை அளிக்கும். உங்களை எனர்ஜியுடன் செயல்பட வைக்கும். ‘‘ பல வருடங்களாக நடந்த ஆய்வுகளுக்குப் பிறகு ஒரு விஷயம் வெளிப்பட்டிருக்கிறது. உங்களின் சூழல் மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் சிரியுங்கள்.

அந்தச் சிரிப்பு பொய்யாக இருந்தாலும் பரவாயில்லை. சிரிப்பின் போது முகத்தில் நிகழ்கின்ற அதிர்வுகள் நேர்மறையான சமிக்ஞையை மூளைக்கு அனுப்புகின்றன. அது சிரிப் புக்கு முன்  இருந்த  மனநிலையைவிட சிறந்ததாக இருக்கிறது...’’ என்கிறார் மும்பையைச் சேர்ந்த மனநல மருத்துவரான சாகர். மட்டுமல்ல, சிரிப்பு உங்களின் மன உணர்வுகளை சமநிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது என்பது இதில் ஹைலைட்.

Related Stories: