சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு: தமிழகத்தின் பல இடங்களில் காங்கிரஸ் போராட்டம்

குமரி: சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏழை, எளிய மக்களை வஞ்சிப்பதாக குற்றம் சாடியுள்ளார். சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையம் முன்பு திரண்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். சேலம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சியின் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆத்தூரிலும் பேருந்து நிலையம் முன்பு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பை பற்ற வைத்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல் நாமக்கல், மணப்பாறை, உசிலம்பட்டி, பல்வேறு பகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சென்னையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: