×

விலையேற்றத்தின் ஆட்டம் ஆரம்பம்.. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ.31,408-க்கு விற்பனை

சென்னை: கடந்த ஒருவாரமாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்ட நிலையில் சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.31,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையில் கடந்த சில மாதங்களாக நிலையில்லாத தன்மை காணப்படுகிறது. மாதத்தில் சில நாட்கள் குறைந்தும்,  பல நாட்களில் விலை அதிகரித்த வண்ணமும் உள்ளது. இந்நிலையில் கடந்த 6-ம் தேதி 22 காரட் தங்கம் கிராம் ரூ3,832க்கும், ஒரு சவரன்  தங்கம் 30,896க்கும் விற்பனையானது. இந்நிலையில் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏற்றம்கண்டு வந்தது.

தங்கத்தின் விலை பிப்ரவரி 15ம் தேதி, அதிகபட்சமாக உயர்ந்து சவரன் 31,392 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று சற்றே விலை குறைந்து  ஒரு கிராம் ரூ3,902க்கும் சவரன் ரூ31,216க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று காலை  சவரனுக்கு ரூ88 உயர்ந்து ரூ31,304க்கும் கிராம் ரூ3,913க்கும் விற்பனையானது. இந்நிலையில் தற்போது சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.31,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரு கிராம்  ரூ.3,926-க்கும், வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.50.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வு நகை வாங்க திட்டமிட்டுள்ள பலரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இதே நிலை தொடரும்பட்சத்தில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலை தொடர வாய்ப்புள்ளது. அரசின் வரிகள், செய்கூலி, சேதாரம் சேர்த்து தங்கத்தின் விற்பனை விலை ரூ40 ஆயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளது.

Tags : jewelery ,sovereign , Inflation, ornamental gold
× RELATED 3 நகை பட்டறைகளில் வருமானவரி சோதனை