கெய்ர்ன்ஸ் கோப்பை போட்டி கொனேரு ஹம்பி சாதனை: சர்வதேச பட்டியலில் முன்னிலை

செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவில் நடைபெறும் கெய்ர்ன்ஸ் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் கொனேரு ஹம்பி வெற்றி பெற்றார். இவர் கடந்த இரண்டு மாதங்களில் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடந்த கெய்ர்ன்ஸ் கோப்பை செஸ் போட்டியில் வென்றதன் மூலம் தனது இரண்டாவது பட்டத்தை பெற்றார். ஒன்பதாவது மற்றும் இறுதி சுற்றில் துரோணவள்ளி ஹரிகாவுக்கு எதிராக டிரா செய்ததைத் தொடர்ந்து வெற்றி பெற்றார். 5.5 புள்ளிகளுடன் முடித்த சாம்பியன் போட்டியில், ஜூ வெசூனை விட ஆறு புள்ளிகளுடன் ஹம்பி வெல்ல முடிந்தது.

Advertising
Advertising

இந்த வெற்றியின் மூலம், ஹம்பி ஐந்து இஎல்ஓ மதிப்பீட்டு புள்ளிகளை கூடுதலாக பெறுவார். சர்வதேச தரவரிசைக்கான புள்ளி பட்டியல் என்பதால் உலக பட்டியலில் 2வது இடத்திற்கு ஹம்பி முன்னேறுவார். மற்றொரு வீராங்கனை ஹரிகா 4.5 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். கொனேரு ஹம்பி 2019 டிசம்பர் கடைசி வாரத்தில் உலக சாம்பியனாக முடிசூட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: