நிலத்தடி நீர் மேம்பாட்டுக்கான தேசிய திட்டம் : உலக வங்கி - மத்திய அரசு இடையே 450 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தம் கையெழுத்து

டெல்லி : நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதை தடுப்பதற்கும் நிலத்தடி நீர் குறித்த ஆய்வு நிறுவனங்களை வலுப்படுத்துவதற்குமான தேசிய திட்டத்திற்கு ஆதரவாக உலக வங்கியும் மத்திய அரசும் 450 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. உலக வங்கி ஆதரவுடனான அட்டல் நிலத்தடி நீர் நிர்வாக மேம்பாட்டுத் திட்டம், குஜராத், மகாராஷ்திரா, ஹரியானா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 78 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளன.

நிலத்தடி நீரை உறிஞ்சுதல், நிலத்தடி நீர் மாசுபடுதல் ஆகியவற்றையும், நிலத்தடி நீர் நிர்வாகம் தொடர்பாக நிறுவன ரீதியில் தயார் நிலையில் இருத்தல், புதிய முயற்சிகளை அமல்படுத்தும் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு இந்த மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடன் தொகையில் 80%நிலத்தடி நீர் நிர்வாக இலக்குகளை எட்டியதற்கான ஊக்கத் தொகையாக, கிராமப் பஞ்சாயத்துகள், மாவட்டங்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை, நிலத்தடி நீர் நிர்வாகத்தை நீடிக்கச் செய்யும் தொழில்நுட்பங்களுக்கும் தெரிவு செய்யப்பட்ட மாநிலங்களில் நிறுவன ஏற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும். 

Related Stories: