கோடைசீசனுக்கு தயாராகுது பிரையண்ட் பூங்கா: 3வது கட்ட மலர் நாற்று நடும் பணி துவக்கம்

கொடைக்கானல்: கோடைசீசனுக்காக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மூன்றாவது கட்ட மலர் நாற்று நடும் பணி துவங்கியது. கொடைக்கானலில் எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்கள் குளுகுளு சீசன் காலமாகும். இந்த காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் கொடைக்கானல் வந்து செல்வர். இதையொட்டி பிரையண்ட் பூங்கா நிர்வாகம் ஏப்ரல், மே மாதங்களில் பூக்கும் வகையிலான பூக்களின் நாற்றுகளை நடும் பணியை துவக்கியுள்ளனர். இதற்காக மலர் படுகைகள் தயாரிக்கப்பட்டு அஷ்ட மேரியா, சால்வியா, டெல் பீனியம், உயர்ரக டேலியா பூக்களின் நாற்று நடும் பணியை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பிரையண்ட் பூங்கா மேலாளர் சிவபாலன் கூறியதாவது, ‘தற்போது சால்வியா பின்க்காஸ்டர் உள்ளிட்ட 50 ஆயிரத்திற்கும் அதிகமான மலர் நாற்று நடும் பணிகள் இரண்டு கட்டமாக நடப்பட்டன. இந்த மலர்கள் ஆண்டுதோறும் பூக்கக்கூடிய ரக மலர்களாகும். தற்போது மூன்றாம் கட்டமாக டெல்பீனியம், ஆண்ரேனியம், பேன்சி உள்ளிட்ட ஆயிரம் மலர் நாற்று நடும் பணி தொடங்கியுள்ளது இந்த ஆண்டு புனேவில் இருந்து உயர் ஒட்டுரக டெல்பின் இயம் என்ற சங்கு வடிவ பூக்கள் கண்ணாடி மாளிகையில் நடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வரும் கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க, பிரையண்ட் பூங்காவில் பல லட்சம் மலர்கள் பூத்து குலுங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்’ என்றார்.

Related Stories: