ஆவின் பால் டேங்கர் ஒப்பந்த லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: 4வது நாளாக நடந்த ஆவின் பால் டேங்கர் ஒப்பந்த லாரிகள் ேபாராட்டம் நேற்று மாலை வாபஸ் பெறப்பட்டது. தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் பால் சப்ளை செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் சப்ளை செய்வதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியார் டேங்கர் லாரிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டுடன் ஒப்பந்தம் முடிவடைந்தும், புதிய ஒப்பந்தம் போடவில்லை. சத்துணவு டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கிய கிறிஸ்டி நிறுவனத்துக்கு முழு ஒப்பந்தத்தையும் வழங்கப் போவதாக தகவல் வெளியானது.

இதனை கண்டித்து தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து, 14ம் தேதி நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். சென்னைக்கு 150 லாரிகள் மூலம் 15 லட்சம் லிட்டர் பால் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் 4வது நாளாக ஆவின் டேங்கர் லாரிகள் போராட்டம் நேற்றும் தொடர்ந்து நடந்து வந்ததால் சென்னையில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் போராட்டத்ைத வாபஸ் பெறுவதாக ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். இதையடுத்து ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க வாய்ப்புள்ளது.

Related Stories: