உதய் மின்திட்டத்தால் கடன் சுமை அதிகரிப்பு

சட்டப்பேரவையில் மதுரை மத்திய தொகுதி பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் (திமுக): ஒவ்வொரு திட்டத்துக்கும் கடன் வாங்கி தான் செலவு செய்கிறார்கள். இதனால், தான் கடன் சுமை அதிகரித்து கொண்டே போகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: 2017ல் உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு மின் பகிர்மான கழகம் கடனை ஏற்றுக்கொண்டதே காரணம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் 25 சதவீதம் இருக்க வேண்டும். தமிழக அரசை பொறுத்தவரையில் 21.83 சதவீதமாக தான் உள்ளது. தற்போது நல்ல பொருளாதார சூழ்நிலை உள்ளது. எனவே, கடன் அளவு குறைய வாய்ப்புள்ளது. வரும் 2021-22ல் நமது வளர்ச்சி விகிதம் 14 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் : உதய் மின் திட்டத்தை ஏற்று கொள்ளும் போது, அவர்கள் கடன் தருவதாக சொன்னார்களா, அதனால் ஏற்படும் நஷடத்தை தருகிறோம் என்று சொன்னார்களா? அமைச்சர் தங்கமணி: 3 மாதத்துக்கு மின் கட்டணம் திருத்தி அமைக்கப்படும், விவசாயிகளுக்கு மின் மீட்டர் பொருத்துவது போன்ற நிபந்தனை ஏற்க மறுப்பு தெரிவித்தோம். இந்த நிபந்தனை தளர்த்திய பிறகே நாங்கள் அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டோம்.

Related Stories: