ஈரோடு அதிமுகவினருடன் எடப்பாடி, ஓ.பி.எஸ் ஆலோசனை அமைச்சர் கருப்பணன் மீது எம்எல்ஏக்கள் சரமாரி குற்றச்சாட்டு

சென்னை:அதிமுகவில் உள்கட்சிப் பூசல் பெரிய அளவில் வெடித்ததால், கட்சியின் நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த வாரம் ஆலோசனை ெதாடங்கினர். ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ேநற்று முன்தினம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. தொடக்கத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, யாரைப் பற்றியும் தனிப்பட்ட  விமர்சனம், குறைகள் வேண்டாம். இருந்தால் எழுத்து மூலம் புகார் தந்தால் விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்துவார்கள்’’ என்றார். ஆனால், ஈரோடு எம்எல்ஏ தென்னரசு பேசும்போது, ‘‘ஈரோடு கட்சி முழுமையாக அழிந்து விட்டது. செயல்பாடு இல்லாமல் இருக்கிறது. ஆலோசனைக் கூட்டத்தை அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான கருப்பணன் நடத்தவே இல்லை. இவ்வாறு இருந்தால், வருகிற சட்டப்பேரவை தேர்தலில் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது’’ என்றார்.

அதைத் தொடர்ந்து, ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் பேசும்போது, ‘‘எங்கள் தொகுதிக்கு வரவேண்டிய ஊராட்சி-கோட்டை குடிநீர் திட்டம் வராமல் அமைச்சர் தடுக்கிறார். டெண்டர் எடுத்த நிறுவனம் பெரியது. மேலிட ஆதரவுடன் வந்துள்ளது. ஆனால் மாவட்ட அமைச்சரால் அந்த திட்டத்தை தடுக்க முடிகிறது. டெண்டர் விட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியும் அவரால், பணிகள் தொடங்க முடியவில்லை’’ என்றார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டு, ‘‘தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்க வேண்டாம்’’ என்றார்.

ஆனால் தொடர்ந்து பேசிய ராமலிங்கம்,‘‘யாரையும் குறிப்பிட்டு பேச வேண்டாம் என்றால், எதற்காக ஆலோசனைக் கூட்டம்?. நான் என் கருத்தை தெரிவிக்கிறேன். கட்சிக்கு எதிராக அமைச்சர் செயல்படுகிறார். ஈரோடு மாநகராட்சி தேர்தலில் கட்சி வேட்பாளருக்கு எதிராக போட்டியிடுவதற்காக 4 சுயேட்சைகளை ரெடியாக வைத்துள்ளார். கடந்த மக்களவை  தேர்தலில் ஒரு தொகுதிக்கு தலைமையிடம் இருந்து ரூ.10 கோடி செலவுக்கு கொடுக்கப்பட்டது. அதை அமைச்சர் செலவே செய்யவில்லை. நான் என்னுடைய பங்காக ரூ.2.5 கோடியை கையில் இருந்து செலவு செய்தேன். அதைக் கூட இதுவரை திருப்பித் தரவில்லை. சட்டப்பேரவை தேர்தலிலும் அவரிடம் பணம் கொடுத்தால், எப்படி செலவு செய்வார்’’ என்றார்.

அப்போது, மூத்த நிர்வாகிகள், ‘‘பணம் குறித்து எதுவும் பேச வேண்டாம். இவ்வாறு பேசித்தான், பலர் மீது வழக்குகள் உள்ளது. அதில் இருந்து இன்னும் வெளியில் வர முடியாமல் தவிக்கிறோம். நீங்கள் புதிதாக பணப் பிரச்னையை எழுப்ப வேண்டாம்’’ என்றனர். ஆனால் அவர் விடாப் பிடியாக பண விவகாரத்தை முழுமையாக பேசி முடித்தார். முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலமும், கட்சிப் பிரச்னைகளை எழுப்பினார். முதல்வர் கூறியபின் பொதுவாக பேசினார். பின்னர் புகாராக எழுதி கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினார். அமைச்சர் செங்கோட்டையன், சீனியர் என்பதால் தலைவர்கள் வரிசையில் அமர்த்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நிர்வாகிகளுடன் உட்கார வைக்கப்பட்டார்.

Related Stories: