×

சிஏஏ எதிர்த்து 4வது நாளாக போராட்டம்

மதுரை: குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், சென்னையில் முஸ்லீம்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மதுரை மகபூப்பாளையத்தில் கடந்த 14ம் தேதி முதல் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகளுடன் பங்கேற்றுள்ளனர். நேற்றும் 4வது நாளாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். வேலூர்: வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் 3வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்றும் போராட்டம் நடந்தது.


Tags : CAA , CAA, 4th day, struggle
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்