×

கேப்டன் பதவியை உதறினார் டுபிளெஸ்ஸி

ஜோகன்னஸ்பர்க்: டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக பேப் டு பிளெஸ்ஸி அறிவித்துள்ளார்.கடந்த மாதம் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியை ராஜினாமா செய்த டு பிளெஸ்ஸி (35 வயது), தற்போது டெஸ்ட், டி20 போட்டிகளிலும் புதிய கேப்டனுக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொள்ள முடிவு செய்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் குவின்டன் டி காக், மூன்று வகை கிரிக்கெட்டிலும் தலைமை பொறுப்பேற்கும் வாய்ப்பு உள்ளதாக தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது பதவி விலகல் குறித்து டு பிளெஸ்ஸி விடுத்துள்ள அறிக்கையில், ‘இது மிகக் கடினமான முடிவு. தென் ஆப்ரிக்க அணி புதிய தலைமையின் கீழ் புதிய பயணத்தை தொடங்கும் நேரம் இது. அணியில் ஒரு சாதாரண வீரராக டி காக் மற்றும் சக வீரர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிப்பேன். மூன்று வகை கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடுவேன். புதிய கேப்டனுக்கு எனது அனுபவ ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.2012ம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற டு பிளெஸ்ஸி, இது வரை 112 சர்வதேச போட்டிகளில் தலைமை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Duplessis , Duplessis,dismissed ,captain
× RELATED ருதுராஜ் - டூபிளெசிஸ் பார்ட்னர்ஷிப்...