ஹாரன் அடித்ததால் ஆத்திரம் பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபருக்கு போலீஸ் வலை

சென்னை: ஹாரன் அடித்ததால் ஆத்திரமடைந்த வாலிபர், மாநகர பஸ்சின் கண்ணாடியை கல் வீசி உடைத்துவிட்டு தப்பினார். அவரை, போலீசார் தேடி வருகின்றனர்.சாலிகிராமத்தில் இருந்து மாநகர பஸ் (17 இ) நேற்று முன்தினம் இரவு எழும்பூர் பாந்தியன் சாலை வழியாக பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்தது. விழுப்புரத்தை சேர்ந்த டிரைவர் ஆறுமுகம் பஸ்சை ஓட்டினார். பாந்தியன் சாலையில் நெரிசல் மிகுந்து காணப்பட்டதால், டிரைவர் தொடர்ந்து ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது.

அப்போது, முன்னால் பைக்கில் சென்ற வாலிபர், பஸ் டிரைவரிடம், ‘‘ஏன் தொடர்ச்சியாக ஹாரன் அடிக்கிறீர்கள். காது வலிக்கிறது,’’ என கேட்டுள்ளார். அதற்கு டிரைவர் அந்த வாலிபரை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், அங்கு கிடந்த கல்லை எடுத்து பஸ் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி டிரைவர் கொடுத்த புகாரின்படி, எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு மேகராவில் அந்த வாலிபர் உருவம் பதிவாகியுள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: