×

மீண்டும் பாஜ.வில் இணைந்தார் பாபுலால் மராண்டி

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரான பாபுலால் மராண்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நேற்று மீண்டும் பாஜ.வில் இணைந்தார். அவரது ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா பிரஜா தந்திரிக் கட்சியும் பாஜ.வுடன் இணைக்கப்பட்டது.  இதுகுறித்து ராஞ்சியில் நடந்த பேரணியில் பங்கேற்ற அமைச்சர் அமித்ஷா கூறுகையில், ``கடந்த 2014ல் பாஜ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, பாபுலால் மராண்டியை கட்சியில் சேர்க்க முயற்சித்து வந்தேன். இப்போது அவர் திரும்பி வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கும், அவரது கட்சியின் தொண்டர்களுக்கும் பாஜ.வில் உரிய மரியாதை அளிக்கப்படும் என்று கூறினார். கடந்த 2000ம் ஆண்டில் பீகாரில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட போது, பாபுலால் மராண்டி அதன் முதல், முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Babulal Marandi ,BJP , Again, joined , BJP, Babulal Marandi
× RELATED ஜார்க்கண்ட் காங். எம்பி பாஜவில் சேர்ந்தார்