×

புது திட்டத்துக்கு சாமியின் ஆசிர்வாதம் பெறுவதற்காக காசி - மகாகாள் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு இருக்கை முன்பதிவு

புதுடெல்லி:  காசி-மகாகாள் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு ரயில்வே ஒரு இருக்கையை ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் காசி மற்றும் மத்தியப்பிரதேசத்தின் மகாகாள் இடையே ஐஆர்டிசி சார்பாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
இந்த ரயிலில் இறைவன் சிவபெருமானுக்காக பிரத்யேக இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. பி5 பெட்டியில் இருக்கை எண் 64 இறைவன் சிவபெருமானுக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த ரயிலானது இந்தூர் அருகே ஓம்காரேஸ்வர், உஜ்ஜைனில் உள்ள மகாகாளேஸ்வரர் மற்றும் வாரணாசியில் உள்ள காசி விஸ்நாதர் ஆகிய மூன்று ஜோதிர்லிங்கங்களை இணைக்கின்றது.

தொடக்க விழாவின்போது சிவபெருமானுக்காக ஒதுக்கப்பட்ட பிரத்யேக இருக்கையில் மகாகாள் சிவனின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த புகாரை ஐஆர்சிடிசி மறுத்துள்ளது. தொடக்க ரயிலுக்காக ஊழியர்கள் தற்காலிகமாக வைத்து பூஜை செய்த சிவபெருமான் படம்தான் அது என்று கூறியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான டிவீட்டை இணைத்துள்ள ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, சிவபெருமானுக்கு சீட் ஒதுக்கியது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளதோடு, அரசியலைமைப்பு நூலின் முகப்பு பக்கத்தையும் இணைத்துள்ளார். இதுகுறித்து தெரிவித்துள்ள ஐஆர்சிடிசி இறைவன் சிவபெருமானுக்கு இருக்ைக ஒதுக்கீடு செய்யப்பட்டது புதிய திட்டத்துக்காக கடவுளின் ஆசிர்வாதத்தை பெறுவதற்காக தான் என குறிப்பிட்டுள்ளது. காசி - மகாகாள் எக்ஸ்பிரஸ் ரயிலின் வர்த்தக ரீதியிலான சேவையானது நாளை மறுதினம் முதல் தொடங்க உள்ளது.

Tags : Shiva ,Kasi-Mahakal ,Kasi - Mahakal , Kasi - Mahakal, express train, seat reservation for Lord Shiva
× RELATED சிவ வழிபாட்டில் பூதங்கள்