பொது இடங்களில் உள்ள பேனர்களை அகற்ற வேண்டும் : தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் பொது இடங்களில் உள்ள பொது பாதுகாப்புக்கு  அச்சுறுத்தலாக இருக்கும் பேனர், விளம்பரங்களை அகற்ற தெற்கு டெல்லி  மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது  இடங்களில் உள்ள விளம்பரங்கள் பொது மக்களின் உயிருக்கு அச்சறுத்தலாக  இருப்பதுடன், இவை நகரின் அழகை கெடுக்கின்றன. இப்பிரச்னை நாடு தழுவிய  ஒன்றாகும். இதை தாமாகவே முன்வந்து வழக்காக எடுத்து கொண்ட உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி டி என் படேல், நீதிபதி சி ஹரி சங்கர் தலைமையிலான அமர்வு  தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு நேற்று சில அதிரடி உத்தரவுகளை  பிறப்பித்துள்ளது. பொது இடங்களிலுள்ள சட்ட விரோத விளம்பரங்கள், பேனர்களை  அகற்ற வேண்டும்.

2017ம் ஆண்டு மேற்கொள்ள வெளிப்புற விளம்பர கொள்கையின்படி  மாநகராட்சி நடந்து ெகாள்ள வேண்டும் என நம்புகிறோம். சட்ட விரோத விளம்பர  பலகைகள் உடனடியாக அகற்றப் பட வேண்டும். இந்த வழக்கை கண்காணிக்க வேண்டிய  தேவையிருக்காது என கூறி வழக்கை முடித்து வைத்தனர். 2017ம்  ஆண்டு அறிவிக்கப்பட்ட விளம்பர கொள்கையின்படி, தேசிய பூங்காக்கள், வரலாற்று  சிறப்பு மிக்க நினைவு சின்னங்கள், உலக பாரம்பரிய பகுதிகள், மத வழிப்பாட்டு  இடங்களில் விளம்பரங்கள் செய்ய, பேனர்களை வைக்க தடை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: