×

ஜார்கண்டில் பலம் பெற்ற தாமரை: ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா கட்சி பாஜகவுடன் ஐக்கியம்: கலக்கத்தில் காங்கிரஸ் கூட்டணி

ராஞ்சி: ஜார்க்கண்டில் மாநிலக் கட்சியாக விளங்கி வந்த ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா இன்று பாஜகவுடன் ஐக்கியமானது. 2000ம் ஆண்டில் புதிதாக உதயமான ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் முதலமைச்சரானவர் பாஜகவைச் சேர்ந்த பாபுலால்  மாரண்டி. 4 முறை எம்.பியாகவும், வாஜ்பாய் அரசாங்கத்தில் மத்திய இணையமைச்சராகவும் இருந்த மாரண்டி மாநில பாஜக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா கட்சியை 2006ல்  உருவாக்கினார். 2009 சட்டமன்ற தேர்தலில் 11 தொகுதிகளையும், 2014ல் 8 தொகுதியிலும், கடந்த ஆண்டில் 3 தொகுதிகளிலும் பாபுலால் மாரண்டியின் வந்த ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா வென்றிருந்தது.

கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மற்றொரு மாநிலக் கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்சாயானது, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில் பாஜக தலைமையுடன் ஏற்பட்ட பிணைப்பின்  காரணமாக தன்னுடைய கட்சியை மீண்டும் பாஜகவில் பாபுலால் மாரண்டி ஐக்கியமாக்கியுள்ளார். ராஞ்சியில் நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து  கொண்டு பாபுலால் மாரண்டியை வரவேற்றனர். ராஞ்சியில் உள்ள ஜகன்னாத்புர் மைதானத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில் ஆயிரக்கணக்கான ஜார்கண்ட் விகாஸ் மோர்சா கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சாவின் இணைப்பு காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக பலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பாஜகவுடன், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா கட்சி இணைக்கப்பட்ட சில மணி நேரங்களில் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா கட்சி எம்.எல்.ஏக்களான பிரதீப் யாதவ் மற்றும் பந்து திர்கே ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

Tags : Lotus ,Jharkhand ,Jharkhand Vikas Morza Party ,BJP , Lotus: Jharkhand Vikas Morza Party united with BJP in Jharkhand
× RELATED கட்சி மாறுவதற்கு பாஜவினர் செல்போன்...