×

தேமுதிகவும் சீட் கிடைக்குமா என எதிர்பார்ப்பு மாநிலங்களவை எம்பி பதவிக்கு நெல்லை அதிமுகவினர் முயற்சி: திமுக பலம் கூட வாய்ப்பு

நெல்லை: ராஜ்ய சபாவில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 51 உறுப்பினர்கள் பதவிக் காலம் நிறைவு பெறுகிறது. இவர்களில் திமுகவை சேர்ந்த திருச்சி சிவா, நெல்லையை சேர்ந்த அதிமுக மாநில மகளிரணி செயலாளர் விஜிலா சத்யானந்த், நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் முத்துக்கருப்பன், அதிமுகவை சேர்ந்த ேமட்டுப்பாளையம் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ரங்கராஜன், அதிமுக சார்பில் நியமிக்கப்பட்டு தற்போது பாஜவில் சேர்ந்துள்ள சசிகலா புஷ்பா  ஆகிய 6 பேரின் பதவிக் காலம் ஏப்ரலில் நிறைவு பெறுகிறது. இதற்கான தேர்தல் ஏப்ரலில் நடக்க வாய்ப்புள்ளது.

எம்எல்ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு அந்தந்த அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வர். இதற்கு போட்டி இருந்தால் மட்டுமே தேர்தல் நடைபெறும். அவ்வாறு நடக்கும் தேர்தலில் எம்எல்ஏக்கள் வாக்களிப்பர். போட்டியில்லாத பட்சத்தில் அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவர். தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் நிலவரப்படி திமுகவிற்கு 3 இடங்களும் அதிமுகவிற்கு 3 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதிமுகவில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 3 உறுப்பினர்களின் பதவிக் காலம் ஒரே நேரத்தில் காலியாவதால் அந்த இடத்தை மீண்டும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கே வழங்கவேண்டும் என்ற கோரிக்கை கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. இந்த பதவிக்கு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஏற்ெகனவே அனுபவம் உள்ள விஜிலாசத்யானந்த், முத்துக்கருப்பன், மனோஜ்பாண்டியன், மக்களவை உறுப்பினராக இருந்த அதிமுக நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இருந்த பிரபாகரன் ஆகியோர் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக தங்கள் ஆதரவாளர்கள் மூலம் காய் நகர்த்தி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த நெல்லை மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடனான கட்சி வளர்ச்சி ஆலோசனை கூட்டத்தில் முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த் உள்ளிட்டோர் இந்த கோரிக்கையை நேரடியாக தலைமையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதிமுக சார்பில் தேர்வாக உள்ள 3 பேரில் ஒரு பதவி பெண் உறுப்பினருக்கு வாய்ப்பளிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிகவும் தங்கள் கட்சிக்கு ஒரு எம்பி சீட் ஒதுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. கடந்த மக்களவை தேர்தலின் சீட் ஒப்பந்த்தின் போதே தேமுதிக தங்கள் கட்சிக்கு மாநிலங்களைவை உறுப்பினர் பதவிக்கு ஒரு சீட் வேண்டும் என்ற கோரிக்கையை கூறியிருந்தது.

மற்றொறு கூட்டணி கட்சியான பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதால் தங்கள் கட்சிக்கு இந்த முறை காலியாகும் 3 இடங்களில் ஒரு இடம் ஒதுக்கவேண்டும் என தேமுதிக எதிர்பார்க்கிறது. ஆனால் இது அதிமுகவால் ஏற்கப்படுமா என்பது கேள்விக்குறி. ராஜ்ய சபா தேர்தலை எதிர்பார்த்து அதிமுகவினர் காய் நகர்த்தத் தொடங்கியுள்ளதால் தற்போதே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Rice MPs ,DMK ,TMC ,NDTV ,MP candidate ,Rajya Sabha , Temuthika, Rajya Sabha MP post, Paddy AIADMK, attempt
× RELATED ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாய் ரூ.24 கோடியில் சீரமைப்பு