மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு: NPR-க்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: திமுகவின் உட்கட்சி தேர்தல் வருகின்ற 21ம் தேதி தொடங்குகிறது. கிளை, ஒன்றியம், நகரம், மாநகரம் என பல்வேறு கட்டங்களாக இந்த தேர்தலானது நடைபெறவிருக்கிறது. கடந்த முறை உட்கட்சி தேர்தல் நடைபெற்ற போது  ஆங்காங்கே பல்வேறு இடங்களில் அசம்பாவித சம்பவங்கள், கட்சியினருக்குள்ளாகவே வாக்குவாதங்கள் மற்றும் அடிதடி நிகழ்வுகள் எல்லாம் ஏற்பட்ட நிலை காணப்பட்டது. இந்த முறை அதுபோன்று நிலைகள் இல்லாமல் சுமூகமான முறையில்  யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து கட்சியினர் அமைதியான முறையில் வாக்களித்து, தங்களுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை திமுக தலைமை மேற்கொண்டு வருகிறது.

எனவே இந்த தேர்தலை எவ்வாறு சுமூகமாக நடத்துவது என்பது குறித்த ஒரு ஆலோசனை கூட்டமானது சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில் என்பிஆர்-க்கு எதிராக மக்களைத் திரட்டி காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்து சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை நிறைவேற்ற  வேண்டும். அதிமுக ஆட்சியில் ஒட்டுமொத்த பணி நியமனங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. சர்வாதிகாரத்தனத்துடன் ஏற்க மறுத்ததோடு போராட்டத்தை கொச்சைப்படுத்திப்  பேசிய முதலமைச்சர் பழனிசாமிக்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் விடுத்த நியாயமான கோரிக்கை.

மேலும், திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு உட்கட்சி தேர்தலை எப்படி நடத்துவது? எந்தவிதமான முறைகளில் இந்த தேர்தலை கொண்டு செல்வது? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், திமுக பொருளாளர் துறைமுருகன், திமுக அமைப்புச்செயலாளர் எஸ்.ஆர். பாரதி, திருச்சி தெற்கு மாவட்ட திமுக முதன்மைச் செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான  கே.என்.நேரு, திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

Related Stories: