ஆயுட்காலம் முடித்தும் தொடர்ந்து இயங்கி வரும் முதலாவது அனல்மின் நிலையத்தை 2022க்குள் படிப்படியாக மூட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

டெல்லி: நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சியின் முதலாவது அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நெய்வேலியில் உள்ள என்எல்சி அனல் மின் நிலையம் தென்னிந்தியாவில் உள்ள பெரிய அனல் மின் நிலையம் ஆகும். நெய்வேலி லிங்கனைட் காப்பரேஷன் லிமிடேட் என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம் மூலம் வருடம் முழுக்க 30 மில்லியன் டன் லிக்னைட் எடுக்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் நேரு மூலம் 1956ல் இந்த என்எல்சி கொண்டு வரப்பட்டது. என்எல்சியில் தற்போது 5 அனல் மின் நிலைய உற்பத்தி யூனிட்கள் உள்ளது. இதன் மூலம் மொத்தமாக 4240 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல் 51 காற்றாலை மூலம் 1.50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் சோலார் மூலம் 140 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.மொத்தமாக அங்கு 4431 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில்தான் அங்கு இருக்கும் முதலாவது அனல் மின் நிலையத்தை மட்டும் மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பல வருடமாக இயங்கி வருவதால் இதை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆயுட்காலம் முடிந்து இயங்கி வருவதால் மூடுவதற்கு முடிவு எடுத்துள்ளது.

2022க்குள் அனல் மின் நிலைய யூனிட்டை படிப்படியாக மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.இதன் கட்டுமான பணிகள் 1962ல் தொடங்கியது. இதன் அனைத்து விதமான கட்டுமான பணிகள் 1970ல் முடிந்தது. பின் அதே வருடம் இதன் மின்சார உற்பத்தி பணிகள் தொடங்கியது. ஒரு அனல் மின் நிலையத்தின் ஆயுட்காலம் 45 ஆண்டுகால ஆகும். ஆனால் இந்த அனல் மின் நிலையம் ஆயுட்காலம் முடிந்தும் செயல்பட்டு வந்தது. ஆயுட்காலம் முடிந்தும் 4 வருடங்களாக செயல்பட்டு வந்தது. இதனால் அதிக அளவில் மாசு ஏற்படுவதாகவும், கழிவுகள் அதிகம் உருவாவதாகவும் புகார் வந்தது. அதேபோல் இதன் மூலம் அதிக அளவில் மின்சாரம் தயாரிக்க முடியவில்லை. இதன் செயல்திறன் குறைவாக உள்ளது என்றும் புகார் வைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த யூனிட் மட்டும் 500-600 மெகாவாட் மின்சாரம் தயாரித்து வந்தது. தற்போது இதன் மீதான உற்பத்தி பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மொத்த உற்பத்தி அங்கு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: