×

ராஜ குடும்பத்தின் கடிகாரங்கள்

நன்றி குங்குமம் முத்தாரம்

பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 88 பில்லியன் டாலர்!இப்படிப்பட்டவர்களின் வாரிசுகள் எதைச்செய்தாலும்  அது தலைப்புச் செய்தியாகிவிடும்இந்த வகையில் ராணி வழி வாரிசுகள் கையில் என்னென்ன கடிகாரங்கள் மின்னுகின்றன என்பதைப் பார்ப்போம்.  பிரின்ஸ் வில்லியம்ஸ் இவர் கட்டியிருப்பது  ஒமேகா சீமாஸ்டர் (Omega seamaster) 300 M. விலை: 2050 டாலர். அதாவது ஒரு லட்சத்து 46 ஆயிரம் ரூபாய். இது இளவரசி டயானா (அவருடைய தாயார்) அன்பளிப்பாக கொடுத்ததாகும்.

மேகன் மார்க்கல்

கார்ட்டியர் டேங்க் ஃபிரான்சைஸ் (Corties Tank Francaise) என்ற விலையுயர்ந்த கடிகாரம் தான் இவரது ஃபேவரிட். இந்திய மதிப்பில் இதன் விலை இரண்டு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய். சமீபத்தில் ராஜ வம்சத்தினருக்கு குட்பை சொல்லிவிட்டு கனடா சென்று விட்டார். மார்க்கல் ஒரு காலத்தில் டி.வி. மூலம் மிக  பிரபலம். அப்போதெல்லாம் இந்த வாட்சைத்தான் கட்டியிருப்பார். ஆனால் ராஜ குடும்பத்தில் இணைந்ததும் அவர் கடிகாரம் கட்டுவதே அபூர்வமாகி விட்டது.

பிரின்ஸ் ஹாரி

மேகனின் கணவரான இவர்  ப்ரெய்ட்ஸிங் ஏரோஸ்பேஸ் அவன்டேஜ் என்ற கடிகாரத்தைக் கட்டியிருக்கிறார்.  இதன் விலை இரண்டு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய். பிரின்ஸ் ஹாரியிடம் ஏராளமான விலையுயர்ந்த கடிகாரங்கள் உள்ளன. இதில் ரோலக்ஸ் எக்ஸ்ப்ளோரரும் அடக்கம். ஆனால், இவற்றில் குறிப்பாக மேலே குறிப்பிட்ட இரண்டு கடிகாரங்களையும் அவர் அணிவதே அபூர்வமாகிவிட்டது.

கேத் மிடில்டன்

கார்ட்டியர் பலூன் ப்ளூ தான் கேத்தின் கையை அலங்கரிக்கிறது. விலை 5 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய். மேகன் மார்க்கல் மாதிரி, கேத்தும் ஒரு கார்ட்டியர் கடிகார விசிறி. அவரை கார்ட்டியர் பலூன் ப்ளூவுடன்தான் அடிக்கடி காணலாம்.

பிரின்ஸ் சார்லஸ்

பார்மிஜியானி ப்ளூரியர் டாரிக் க்ரோனோகிராப்தான் சார்லஸின் சாய்ஸ். விலை சுமார் 9 லட்சம் ரூபாய். அவர் ரொம்ப விரும்பி அணியும் கடிகாரம் இதுதான். ஏற்கனவே கார்ட்டியர் மற்றும் படெக் பிலிப்பி கடிகாரங்களையும் முன்பு அவர் அணிந்தது உண்டு. சட்டையின் முன்கை பக்கத்தில், ஸ்டாப் வாட்ச் மாதிரி நம்பர்கள் பொறிக்கப்பட்ட கடிகாரம் ஒன்றும் வைத்திருப்பார்.

Tags : royal family , Do you know the value of the British royal family? $ 88 billion!
× RELATED சபரிமலை கோயில் ஆபரணங்கள் பந்தள அரச...