8 ஆண்டுகளுக்கு உட்பட்ட வாடகைக் கார்களுக்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை எஃப்சி: தமிழகத்தில் கடைசியாக அமலுக்கு வருகிறது

சென்னை: டிரக்குகள், வாடகைக் கார்கள் உள்ளிட்ட வர்த்தக அடிப்படையில் இயக்கப்படும் வாகனங்களை வாங்கி 8 ஆண்டுகளுக்கு மேலாக ஆகி இருந்தால்  ஓராண்டுக்கு ஒரு முறை எஃப்சி எனப்படும் வாகனத்தின் தகுதிச்சான்றிதழை புதுப்பிக்க வேண்டும். அதுவே 8 ஆண்டுகளுக்குள் இருந்தால் 2 ஆண்டுகளுக்கு  ஒருமுறை எஃப்சி புதுப்பித்தால் போதும் என்ற புதிய விதி அமலுக்கு வருகிறது. 8 ஆண்டுகளுக்குள் இருந்தாலும் ஓராண்டுக்கு ஒரு முறை எஃப்சி புதுப்பிக்க  வேண்டும் என்ற நிலையை புதிய விதி மாற்றி அமைக்கிறது.

இதை 2 ஆண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கும் திட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், 2018-ம் ஆண்டிலேயே முன் மொழிந்தது. இதனை  மற்ற மாநிலங்கள் அனைத்தையும் செயல்படுத்தி விட்ட நிலையில், கடைசியாக மத்திய அரசு செயல்படுத்துகிறது. வாகன வல்லுநர்களை பொருத்தவரை  பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, இது தேவையற்ற நடவடிக்கை என்று கூறுகின்றனர். வாகனங்களை வாங்கி 8 ஆண்டுக்குள் இருந்தாலும் ஓராண்டுக்கு  ஒருமுறை எஃப்சி புதுப்பிப்பதே சரி என்று வாகன வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, இந்த புதிய விதிகளை லாரிகளை இயக்கும் உரிமையாளர்கள் வரவேற்கின்றனர். புதிய விதியின் மூலம் டிரக் ஒன்றுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம்  ரூபாய் வரை மிச்சமாகும் என்று தெரிவிக்கின்றனர். மேலும், புதிய விதி 8 ஆண்டுகளுக்கு உட்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் பாதுகாப்பு  குறித்த அச்சம் தேவையற்றது என்றும் லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றன. புதிய வாகனங்கள் என்பதால் தேய்மானமும், பழுதும் குறைவாகவே இருக்கும்  என்ற அடிப்படையில் லாரி, வாடகை கார் உரிமையாளர்கள் இந்த கருத்தை தெரிவிக்கின்றனர். இருப்பினும் அரசு பேருந்துகளை இதில் சேர்க்கக்கூடாது என்றும்  இதனை 6 மாதங்களுக்கு ஒருமுறை எஃப்சியை புதுப்பிக்கும் நிலை தொடர வேண்டும் சிலர் கருத்து தெரிவிக்கின்றன. இருப்பினும் வாகன விபத்துகள்  தொடர்பான புள்ளி விவரங்களை பார்க்கும்போது, புதிய வாகனங்களை அதிக விபத்தை ஏற்படுத்தியுள்ளன என்று சுட்டிக்காட்டப்படுகிறது. 2018-ம் ஆண்டில்  மொத்தம் ஏற்பட்ட மொத்த விபத்துகளில் 38% விபத்துகளை ஏற்படுத்தியது 5 ஆண்டுகளுக்கு உட்பட்ட வாகனங்கள் என்று கூறப்படுகிறது.

Related Stories: